புதுச்சேரி இடைத்தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட முடிவு!
Sep 9, 2026, 06:51 IST
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து ஆலோசிப்பதற்காகப் புதுச்சேரி மாநில திமுக நிர்வாகிகளுடன் கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்தத் தொகுதியில் திமுகவின் வேட்பாளராக மாநில அமைப்பாளர் சிவா, மருத்துவர் ரித்தீஷ் அல்லது தங்கவேலு ஆகியோரில் ஒருவர் களமிறக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
