தவெகவை முடக்க பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக?!

 
ஸ்டாலின்மோடி திமுகபாஜக

தமிழக அரசியலில் தவெக எழுச்சியைக் கட்டுப்படுத்த திமுக-பாஜக இடையே ரகசியக் கூட்டணி அல்லது இணக்கம் உருவாகி வருவதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

மத்திய அமைச்சரவையில் திமுக இணைந்து நிதி, கல்வி, ரயில்வே போன்ற முக்கிய இலாகாக்களைப் பெற்றுக்கொண்டால், மாநில அளவில் தவெக போன்ற புதிய சக்திகளின் வளர்ச்சியை முடக்க பாஜக உறுதுணையாக இருக்கும் என அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தகவல்கள் பரவி வருகின்றன.

தொடர் தேர்தல் வெற்றிகளுக்குப் பிறகும், மத்திய அரசில் அதிகாரப்பூர்வப் பங்கு வகித்தால் மட்டுமே மாநிலத்தின் உரிமைகளையும் அரசியல் செல்வாக்கையும் மேலும் வலுவாகத் தக்கவைக்க முடியும் என திமுக தரப்பும் இதைப் பரிசீலித்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் சிலர் கூறி வருகின்றனர்.

தென்மாநிலங்களில் பாஜக தனது செல்வாக்கை உயர்த்தவும், அதே வேளையில் திமுக தனது முதன்மை எதிரியாக உருவாகி வரும் தவெகவின் வாக்கு வங்கியை கட்டுப்படுத்தவும் இத்தகைய வியூகங்கள் வகுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இத்தகவல்கள் குறித்து திமுக அல்லது பாஜக தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை.

கொள்கை ரீதியாக வேறுபட்ட துருவங்களாக இருக்கும் திமுக மற்றும் பாஜக இணைய வாய்ப்பில்லை என்றும், இது தவெகவின் வருகையால் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்த வெறும் ஊகங்களே என்றும் மற்றொரு தரப்பு அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எது எப்படியோ, தமிழக அரசியலில் தவெகவின் அடுத்தடுத்த நகர்வுகளும் அதற்குப் போட்டியாகக் களம் காணும் திமுக-பாஜகவின் வியூகங்களும் வரும் நாட்களில் மேலும் சூடுபிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை