அமைதிப்பேரணியில் மாமன்ற உறுப்பினர் மயங்கி சரிந்து பலி!! தொண்டர்கள் அதிர்ச்சி!!

 
சண்முகம்

இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 5 வது ஆண்டு நினைவு தினம். இதனையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அமைதி பேரணி நலத்திட்ட உதவிகள் அவரது நினைவலைகள் நிகழ்வுகள் கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.அந்த வகையில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில்   கலைஞர் நினைவு நாள் அமைதிப் பேரணி நடைபெற்றது . இந்தப் பேரணியில் பங்கேற்ற சென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், 146வது வார்டு மாமன்ற உறுப்பினருமான சண்முகம் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 அமைதிப்பேரணி
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள  கருணாநிதி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி விட்டு   முதல்வர்  அங்கிருந்து பேரணியை தொடங்கினார். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த பேரணியில் தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், மஸ்தான், தங்கம் தென்னரசு, சேகர் பாபு உட்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர் .  மேலும் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி உட்பட திமுக அமைச்சர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக மூத்த நிர்வாகிகள் என 1000க்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் பங்கேற்றனர்.

ஆம்புலன்ஸ்

இந்த பேரணியில்  திமுகவின் செயற்குழு உறுப்பினரும், 146 வார்டு மாமன்ற உறுப்பினருமான சண்முகம் பேரணி தொடங்கிய சிறிது நேரத்திலேயே  மயங்கி சரிந்தார்.  உடனடியாக  அவரை தண்ணீர் தெளித்து எழுப்ப முயற்சித்தனர். இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து  விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web