"அதிமுக-வுக்கு திமுக ஆதரவு தரும்!" - எஸ்.வி.சேகர்!

 
எஸ்.வி.சேகர் எஸ்.வி.சேகர்

தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதில் நிலவும் இழுபறி குறித்து நடிகர் மற்றும் அரசியல் விமர்சகர் எஸ்.வி.சேகர் தனது பாணியில் அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வரும் சூழலில், எஸ்.வி.சேகர், "தமிழகத்தில் தவெக ஆட்சி அமைப்பதைத் தவிர்க்க, அதிமுக ஆட்சி அமைக்கத் திமுக வெளியிலிருந்து ஆதரவு அளிக்க அதிக வாய்ப்புள்ளது. இது அரசியல் ரீதியாகப் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் தற்போதைய சூழலில் இது சாத்தியமே."

திருமா விஜய்

"திமுக-வை 'தீயசக்தி' என்று கடுமையாக விமர்சித்துவிட்டு, அதே திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் விஜய் இப்போது ஆதரவு கேட்பது எந்த விதத்தில் நியாயம்? அவர் கேட்பது சரியாக இருந்தால், எதிரெதிர் துருவங்களாக இருக்கும் திமுக-வும் அதிமுக-வும் கைகோர்ப்பதில் எந்தத் தவறுமில்லை."

திராவிடக் கட்சிகள் இரண்டும் தங்கள் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள இத்தகைய முடிவை எடுக்கக்கூடும் என அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார். "மன்னராட்சிக்கு முடிவு கட்டிவிட்டோம்" என்று விஜய் பேசியதைக் குறிப்பிட்ட அவர், தற்பொழுது அதே 'மன்னராட்சி' என்று அவர் குறிப்பிட்டவர்களின் ஆதரவு இல்லாமல் அவரால் ஒரு அடி கூட நகர முடியாது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

ஆளுநர் விஜய்

எஸ்.வி.சேகரின் இந்தத் தகவல் ஒருபுறம் யூகமாகத் தெரிந்தாலும், தவெக-விற்கு முட்டுக்கட்டை போடத் திராவிடக் கட்சிகள் ரகசியமாக ஒன்றிணைய வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படும் தகவல்களுக்கு இது மேலும் வலுசேர்ப்பதாக உள்ளது. அதிமுக தரப்பிலிருந்து இது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ ரியாக்ஷனும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.