ஆகஸ்ட் 4ல் திமுக செயல்வீரா்கள் கூட்டம்... அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு!

 
கீதாஜீவன்
 

ஆகஸ்ட் 4ம் தேதி கயத்தாறு கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற உள்ளது என்று  வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கயத்தாறு கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரா்கள் கூட்டம் வருகிற ஆகஸ்ட் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் கயத்தாறு சூரியா மஹால், திருமண மண்டபத்தில் வைத்து ஒன்றிய அவைத் தலைவா் குருசாமி தலைமையில் நடைபெறுகிறது.

களைகட்டும் தேர்தல் ! திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

மேற்படி செயல்வீரா்கள் கூட்டமானது கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளா் ஆ. சின்னப்பாண்டியன்,  கயத்தாறு பேரூா் கழகச் செயலாளா் சுரேஷ் கண்ணன், கடம்பூர் பேரூா் கழகச் செயலாளா் கா.பாலக்குமார் மற்றும் கயத்தாறு கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெறும்.  கூட்டத்தில்  மாவட்டச் செயலாளராகிய நான்  (கீதாஜீவன்) சிறப்புரை ஆற்றுகிறேன்.

மேலும் தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள்,கடம்பூர் பேரூராட்சி தலைவா் ராஜேஸ்வரி நாகராஜா, கயத்தாறு  பேரூராட்சி தலைவா் சுப்புலெட்சுமி ராஜதுரை ஆகியோர் ஆலோசனை உரை வழங்க இருக்கிறார்கள்.   

எனவே கயத்தாறு கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட  கழக சார்பு அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், கிளைக் கழகச் செயலாளா்கள், பிரதிநிதிகள், நிர்வாகிகள், பாகமுகவா்கள், கயத்தாறு, கடம்G+ர் ஆகிய  பேரூா்க் கழகங்களின் வார்டு செயலாளா்கள், பிரதிநிதிகள், நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கழக தோழா்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.