டிச.20ல் திமுக செயற்குழு கூட்டம்... அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு!

 
கீதா ஜீவன்
 தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற டிசம்பர் 20ம் தேதி வடக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் வருகிற 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு கலைஞர் அரங்கத்தில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற உள்ளது. 

கீதா ஜீவன்

இதில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வருகை குறித்தும், கழக வளர்ச்சிப் பணிகள்  குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

கீதாஜீவன் ஆய்வு

இக்கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர்கழகச் செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!