பிரதீப் கொலை வழக்கு... திமுக நிர்வாகி நவீன் A1 குற்றவாளியாகக் கைது!
Sep 10, 2026, 16:30 IST
சென்னை திருவொற்றியூர் அருகே பிரதீப் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் நவீன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இக்கொலை வழக்கில் அவர் முதலாம் குற்றவாளியாக (A1) சேர்க்கப்பட்டுள்ளார்.
-
கொடுக்கல்-வாங்கல் தொடர்பான தகராறில், காவல் ஆய்வாளர் ஒருவர் தன்னை மிரட்டுவதாகக் கொல்லப்பட்ட பிரதீப் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
இத்தகைய புகார் அளிக்கப்பட்ட மறுநாளே பிரதீப் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

