2009-ல் திமுக தொடங்கி வைத்த தங்க மோதிரம் திட்டம் - மா.சுப்பிரமணியன் விளக்கம்!
Sep 29, 2026, 09:20 IST
தமிழக முதல்வர் விஜய் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை நேற்று தொடங்கி வைத்த நிலையில், இது குறித்த வரலாற்றுப் பின்னணியை முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில் பிறந்து தமிழில் பெயர் வைக்கப்படும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை, இந்தியாவிலேயே முதல்முறையாக கடந்த 2009-ஆம் ஆண்டே தாங்கள் தொடங்கி வைத்து விட்டதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இத்திட்டம் குறித்து திமுக தரப்பிலிருந்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதால், அரசியல் வட்டாரத்தில் இது தொடர்பான விவாதங்கள் எழுந்துள்ளன.
