திமுக அபார வெற்றி - கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவன இயக்குநர் குழுத் தேர்தலில் கலக்கல்!

 
கும்பகோணம் பரஸ்பர நிதி

கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தின் இயக்குநர் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் தலைமையிலான அணி பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இநிறுவனத்தின் இயக்குநர் குழுத் தேர்தல் கடந்த செப்டம்பர் 27 முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை இணையவழி வாக்களிப்பு முறையில் நடைபெற்றது.

இத்தேர்தலில் திமுக மாநிலங்களவை எம்.பி. கல்யாணசுந்தரம் தலைமையிலான தரப்பு 48 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றது. இவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உரிய முறையில் இ-ஓட்டிங்கிற்கு விண்ணப்பிக்காத காரணத்தினால் அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

தேர்தலில் தோல்வியடைந்த தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் நிதி நிறுவனத்திற்குள் அத்துமீறி நுழைந்து பிரச்சினை செய்ததாகத் திமுக தரப்பினர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.