மெரினா குவியும் திமுகவினர்... இன்று கருணாநிதியின் 8-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு!

 
கலைஞர் கருணாநிதி

முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் மறைந்த தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 8-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் வண்ண மலர்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, சேகர்பாபு, எ.வ.வேலு மற்றும் சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட முன்னணி தலைவர்களும் தொண்டர்களும் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்துகின்றனர். அண்ணா அறிவாலயத்தில் இருந்து புறப்படும் அமைதிப் பேரணி மெரினாவில் உள்ள நினைவிடத்தை நோக்கிச் செல்கிறது.