"திமுகவின் கருத்து அரைவேக்காட்டுத்தனமானது" - தவெக தாக்கு!

 
விஜய் பிரச்சாரம் இடைத்தேர்தல் தேர்தல்

தமிழ்நாட்டின் செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் 5 சதவீதம் சரிந்ததாக திமுகவினர் விமர்சித்து வரும் நிலையில், அதற்குத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மொத்த ஜிஎஸ்டி வசூலின் கணக்கை மட்டும் முன்னிறுத்தி, அதனை அரசின் நிர்வாகத் தோல்வி எனக் கூறுவது முற்றிலும் தவறான மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட பிரச்சாரம் எனத் தவெக விமர்சித்துள்ளது.

தமிழ்நாட்டிற்கு உண்மையில் கிடைக்கக்கூடிய வருவாய் 16.1 சதவீதம் உயர்ந்துள்ளதாக நிதித்துறை செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளது. ஐஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரக் காரணிகள் தாக்கம் ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொள்ளாமல் கருத்துத் தெரிவிப்பது "அரைவேக்காட்டுத்தனமானது" எனத் தவெக கடுமையாகச் சாடியுள்ளது.