திராவிட கட்சிக்கு ஓட்டுப் போடாதீங்க.... தவெக திடீர் அறிவிப்பு!

 
விஜய்
 

மக்களவை தேர்தல் காரணமாக அனைத்து  அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர்.  ஒவ்வொரு தேர்தலின் பொழுது ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுப்பது வழக்கம் அப்படி இல்லாவிட்டாலும் எனது நண்பர் அடைக்கலராஜ் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மட்டுமாவது ஒரு போஸ்டர் பரபரப்பை கிளப்பும். இதனாலேயே நான்கு முறை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் அடைக்கலராஜ் வெற்றி பெற்றார் என்பவர்களும் உண்டு.

 ரஜினி
இந்நிலையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார்.  2026 ஆண்டு தான் எங்கள் இலக்கு என்று வெளிப்படையாக விஜய் தெரிவித்து விட்டாலும் தமிழகத்தில் பிரிவினை ஏற்படுத்தும் திராவிட கட்சிக்கு யாரும் லோச்சபா தேர்தலில் ஒட்டு போடவேண்டாம் என்று, தமிழக வெற்றிக் கழகம் பெயரில் அறிக்கை ஒன்று மார்ச் 31ம் தேதி வெளியானது
இதை தமிழக வெற்றிக் கழகம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மறுத்துள்ளார்.

புஸ்ஸி ஆனந்த்

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “சமூக வலைதளங்களில் வெளியான அறிக்கை முற்றிலும் போலியானது அந்த அறிக்கை நாங்கள் வெளியிடவில்லை.  கட்சியின் தொண்டர்கள் யாரும் நம்ப வேண்டாம்” என தெரிவித்துளார். அது சரிங்கண்ணா புஸ்ஸி ஆனந்துனு போட்ட உங்க பேர்ல மீண்டும் புஸ்ஸி வந்திருக்கே இதுவாவது உண்மையா என ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web