பிளஸ் 2 பொதுத்தேர்வை எவ்வளவு பேர் எழுதவில்லை தெரியுமா?! ... ஒரு பார்வை!

 
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேர்வு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேர்வு

தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத 7 லட்சத்து 99 ஆயிரத்து 692 மாணவ-மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அவர்களில் 7 லட்சத்து 91 ஆயிரத்து 654 பேர் மட்டுமே தேர்வை எழுதியுள்ள நிலையில், சுமார் 8 ஆயிரத்து 38 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

இருப்பினும், அரசு தேர்வுத் துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில் 7 ஆயிரத்து 874 பேர் தேர்வை எழுதவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், தேர்வு எழுதாத மாணவர்களின் எண்ணிக்கை தற்போது கணிசமாகக் குறைந்து வருவது ஒரு நல்ல முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

தேர்வு முடிவுகள் மாணவிகள் ரிசல்ட் சிபிஎஸ்இ ஸ்கூல் படிப்பு

உதாரணமாக, கடந்த 2024-ம் ஆண்டில் 11 ஆயிரத்து 594 மாணவர்கள் தேர்வை எழுதாமல் இருந்தனர். அதேபோல், 2025-ம் ஆண்டில் 10 ஆயிரத்து 49 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 7 ஆயிரத்து 874 ஆகக் குறைந்துள்ளதால், இது கல்வித் துறையின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

தேர்வு

பள்ளிக் கல்வித் துறை தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு, தேர்வு எழுதத் தவிர்க்கும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. அதன் விளைவாகவே, ஆண்டுக்கு ஆண்டு தேர்வு எழுதாதவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதன் மூலம் அதிகளவிலான மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்வதும், தங்களது உயர்கல்விப் பயணத்தைத் தொடர்வதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.