"மீடியாவைப் பார்த்து ஓடுகிறேனா..?" - அமைச்சர் ஆனந்த் பதில்!
Aug 19, 2026, 19:10 IST
ஊடகங்களைக் கண்டு தாங்கள் அச்சப்படவோ, ஓடவோ இல்லை என்று எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்குச் சட்டமன்றத்தில் அமைச்சர் என்.ஆனந்த் (புஸ்சி ஆனந்த்) காரசாரமாகப் பதிலளித்துப் பேசியுள்ளார்.
எதிர்க்கட்சியினர் எடக்கு மடக்காகக் கேள்விகளைக் கேட்டு சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்ய நினைப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஊடக நிறுவனங்களை நடத்தி வரும் எதிர்க்கட்சியினர் கேள்வி கேட்கும் போர்வையில் ட்ரோல் செய்யும் நோக்கத்திலேயே செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார்.
இது போன்ற கேள்விகளைக் கண்டு தாங்கள் ஓடவோ, பயப்படவோ மாட்டோம் என்று கூறிய அவர், முதலமைச்சரின் வழியில் எதையும் சாதித்துக் காட்டுவதே தங்களது முக்கிய நோக்கம் எனத் தெரிவித்தார்.
