"மணிப்பூர் மாதிரியே உனக்கும் சேலையை உருவணுமா?!" திமுக பெண் சேர்மனுக்கு நடந்த வன்கொடுமை !!

 
தென்காசி


மணிப்பூர் வன்கொடுமையை கண்டித்து திமுக மகளிரணி சார்பில் தென்காசியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட பெண் சேர்மன் தமிழ்செல்வியை அரசியல் முன்விரோதம் காரணமாக பேச விடாமல் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தடுத்ததால், 'மணிப்பூர் வன்கொடுமையை கண்டித்து போராடுகிறோம், அதற்கும் இங்கு நடப்பதற்கும் என்ன வித்தியாசம்' என்று கோபத்துடன் மாவட்ட பெண் சேர்மன் தமிழ்செல்வி கேள்வி எழுப்பினாராம்.

தென்காசி
இதனால் ஆத்திரமடைந்த மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆதரவாளர்கள், 'மணிப்பூர் மாதிரியே உனக்கும் சேலையை உருவணுமா?' என்று கேட்டு மிரட்டியதோடு சேலையை பிடித்து இழுக்க முற்பட்டதாக சொல்லப்படுகிறது. மாவட்ட பெண் சேர்மன் கையில் வைத்திருந்த மைக் பிடுங்கப்பட்டு அவர் பின் வரிசைக்கு தள்ளப்பட்டாராம், அதற்குப் பிறகும் ஆத்திரம் தணியாத சிவபத்மநாதன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காவலரை வைத்து மாவட்ட பெண் சேர்மனை மேடையை விட்டு கீழே இறக்கிவிட்டனராம். 

தென்காசி


எங்கோ நடக்கும் மணிப்பூரில் நடந்த வன்கொடுமையை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சொந்தக் கட்சியினரால் திமுக மாவட்ட பெண் சேர்மனுக்கு நடந்த வன்கொடுமை தொடர்புடைய வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. கூட்டத்தில் கலந்துகொள்ள பெண்களை எல்லாம் காவல்துறை உதவியுடன் இறக்கவிட்டபின்னர்தான் கூட்டம் நடந்ததாம் சீ சீ மணிப்பூர் என்னடா கொடுமை சரவணா இது வேற என்னத்த சொல்ல !.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web