45 நிமிடங்கள் போராடி விமானி ஸ்மித் மச்சாரியின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்!

 
விமான ஸ்மித் மச்சாரி

துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற விமானத்தில், துணை விமானியே சக விமானியைத் தாக்கிய திடுக்கிடும் சம்பவமும், அவசரச் சிகிச்சையின் மூலம் விமானியின் உயிர் காப்பாற்றப்பட்ட நெகிழ்ச்சியான தகவலும் வெளியாகி உள்ளன.

துபாயில் இருந்து டெல் அவிவ் நகருக்குச் சென்ற ஃபிளைதுபை விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென ஓமனைச் சேர்ந்த துணை விமானி, தலைமை விமானி ஸ்மித் மச்சாரை கத்தியால் தாக்கியுள்ளார்.

ஸ்மித் மச்சார் துபாய் இளவரசர்

தாக்குதலில் பலத்த காயமடைந்த விமானி ஸ்மித் மச்சாரின் உடல்நிலை மோசமடைந்து, உதடுகள் நீல நிறமாக மாறியதாக விமானத்தில் பயணிகளுடன் பயணம் செய்த ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பரபரப்பான தகவலைப் பகிர்ந்துள்ளார்.

விமானம் பறந்து கொண்டிருக்கும் போதே, மருத்துவக் குழுவினரின் உதவியோடு அந்த மருத்துவர் விமானிக்குச் சுமார் 45 நிமிடங்கள் தீவிர முதலுதவி மற்றும் அவசரச் சிகிச்சை அளித்துள்ளார்.

அல் துபாய் விமானம்

இந்தத் துரித மருத்துவ உதவியின் காரணமாக விமானியின் உயிரைக் காப்பாற்ற முடிந்ததாகவும், அதன் பிறகு பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் மருத்துவர் தெரிவித்தார்.