செம... தமிழகம் முழுவதும் குறைவான கட்டணத்தில் தோழி பெண்கள் விடுதி!!

 
தோழி தங்கும் விடுதி

தமிழக அரசு பெண்கள் முன்னேற்றம், மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தின்  9  மாவட்டங்களில் தோழி தங்கும் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன. இருக்கும் இடத்தை விட்டு வெளியூர் சென்று  பணிபுரியும் பெண்களுக்கு உதவும் விதமாக தமிழக  அரசு இந்த  மகளிர் தங்கும் விடுதிகளை தொடங்கியுள்ளது. தோழி விடுதி என்று அழைக்கப்படும் இவ்விடுதி பெண்களுக்கு பாதுகாப்பான, மலிவு விலையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் 11 விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் தோழி விடுதி குறித்து முதல்வர்  மு.க. ஸ்டாலின் தம்முடைய  டுவிட்டர் பதிவில்  "தோழி விடுதிகள் - இது முன்னேறும் மகளிர்க்கான முகவரி!. மகளிர்க்கு சொத்துரிமை, உள்ளாட்சியில் 33 விழுக்காடு ஒதுக்கீடு, உயர்கல்வியை ஊக்குவிக்கும் புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் என மகளிர் முன்னேற்றத்துக்கான நமது திட்டங்களுக்கு மேலும் வலுசேர்க்கும் திட்டம் இது!.

தோழி தங்கும் விடுதி

டாக்டர் நடேசனாரின் 'திராவிடர் இல்லம்' போல், நமது திராவிட மாடலின் தோழி விடுதிகளும் வரலாற்றின் பக்கங்களில் நிலைக்கொள்ளும்!" என பதிவிட்டுள்ளார். தமிழக அரசின் இந்த முயற்சிக்கு பெண்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.  

சென்னை மாவட்டத்தில் அடையாறில் , 2வது குறுக்கு தெரு, சாஸ்திரி நகரில் தோழி (Thozhi  Womens Hostel) பெண்கள் விடுதி இயங்கி வருகிறது. 
அடையாறு பேருந்து பணிமனை- 0.4 கி.மீ.
சென்னை விமான நிலையம்‌ - 12.9 கி.மீ
மின்ட்‌ மருத்துவமனை - 0.35 கி.மீ.
காவல்‌ நிலையம்‌ - 0.35 கி.மீ. 
ஐஐடி சென்னை - 2.7 கி.மீ.
சென்னை தோழி விடுதியில் ஒருவர் தங்கும் அறை, 2 பேர், 4 பேர், 6 பேர் தங்கும் அறைகள் என மொத்தம் 98 படுக்கை வசதிகள் உள்ளன.அதேபோல செங்கல்பட்டு மாவட்டத்தில், எண்‌.6, 4வது தெரு, டிபென்ஸ்‌ காலனி, நெல்லிக்குப்பம்‌ ரோடு (சார்‌ பதிவாளர்‌ அலுவலகம்‌ அருகில்‌), நந்திவரம்‌, கூடுவாஞ்சேரி- 603 202 என்ற முகவரியில் தோழி விடுதி இயங்கி வருகிறது.

பெரம்பலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட 9 நகரங்களிலும் தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் முகவரிகளையும் அங்கு என்னென்ன வசதிகள் உள்ளன என்பது குறித்தும், https://www.facebook.com/photo?fbid=202385226102005&set=pcb.202385502768644 என்ற இணையதளத்தின் மூலம் அறியலாம். 
சென்னையில் உள்ள பிற பெண்கள் விடுதிகள் குறித்து முழுமையாக அறிய https://chennai.nic.in/hostel/ என்ற இணைப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.  குறைந்த கட்டணத்தில் விடுதிகளில் பணிபுரியும் மகளிர் தங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டணம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதேநேரத்தில், வாடகையோடு 1 மாத வாடகைத் தொகை அளவுக்கு, முன்கூட்டியே காப்புத் தொகை பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுதிகளில் ஒரு நாள் வேண்டுமானாலும் தங்கலாம்   15 நாட்களுக்குக் குறுகிய காலமாகவும் தங்கிக் கொள்ளலாம். வாடகையோடு, திரும்பப் பெற முடியும் பாதுகாப்புக் கட்டணத்தைச் செலுத்தி, ஒரு நாள் வேண்டுமானாலும் தங்கலாம். இதற்கு ஒரு நாள் வாடகையோடு ரூ.1000 தொகை வழங்கப்படும். இருவர் தங்கும் அறையில், கூடுதல் கட்டணம் செலுத்தி தனியாகவும் தங்கிக் கொள்ளலாம்.தோழி விடுதிகளில் சேர விரும்பும் பெண்கள் 9499988009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அல்லது techexe@tnwwhcl.in என்ற இ-மெயில் முகவரிக்கு இமெயில் அனுப்பி, கூடுதல் விவரங்களை அறியலாம். 

முழுமையான விவரங்களுக்கு: http://tnwwhcl.in என்ற இணையதளத்தைக் க்ளிக் செய்து, விடுதிகளின் முகவரி, கட்டணம், முன்பதிவு ஆகிய தகவல்களைப் பெறலாம்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web