நெகிழ்ச்சி... சந்தனம், குங்குமம், சீர்வரிசை தட்டுகளுடன் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு!

 
நாய்

 

கரூர் மாவட்டம், சோமூர் பகுதியில் வசித்து வரும் கோமதி என்பவர் தனது வீட்டில் சாரா என்னும் சிட்சு வகையிலான நாயைச் செல்லமாக வளர்த்து வருகிறார். சாராவின் மீது வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகுந்த பாசம் உள்ளதால், அதன் மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஒரு விசேஷமான நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிலையில் வளர்ப்பு நாய் சாராவிற்கு வருகிற 15 முதல் 20-ந் தேதிக்குள் குட்டி பிறக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மதுரையில் பூனைக்கு வளைகாப்பு

இதையொட்டி கோமதி குடும்பத்தினர் நேற்று முன்தினம் அவர்களது வீட்டில் செல்ல நாய் சாராவிற்கு விமரிசையாக வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர். மனிதர்களுக்கு நடத்தப்படுவது போலவே தட்டுகளில் மிக்சர், பிஸ்கட், பழங்கள், பூக்கள் மற்றும் நாய்களுக்கெனப் பிரத்யேகமாக வழங்கப்படும் உணவுகள் உள்ளிட்டவை தட்டுகளில் வைக்கப்பட்டுச் சீர்வரிசையாக வழங்கப்பட்டன. இந்த வித்தியாசமான மற்றும் நெகிழ்ச்சியான நிகழ்வில் குடும்பத்தினரும் அப்பகுதி உறவினர்களும் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

சந்தனம், குங்குமம் புத்தாடை , வளையல்கள் அணிவித்து நாய்க்கு வளைகாப்பு!

வளைகாப்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து விழாவில் கலந்துகொண்ட அனைத்து உறவினர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் சிறப்பான முறையில் அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. செல்லப் பிராணிகள் மீது மனிதர்கள் வைத்துள்ள மாსაற்ற அன்பைக் காட்டும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களிலும் இந்தச் செய்தி வைரலாகி வருவதால் பலரும் கோமதி குடும்பத்தினரின் அன்பைப் பாராட்டி வருகின்றனர்.