மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணை சாப்பிட்ட வளர்ப்பு நாய்கள்.. அதிர்ந்த காவல்துறை!

ருமேனியாவின் புக்கரெஸ்ட்டைச் சேர்ந்த 34 வயதுடைய அட்ரியானா நெகோ என்ற பெண்ணின் வீட்டில் இரண்டு பக் நாய்கள் இருந்தன. அவர் தனியாக வசித்து வந்தார், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அவரைத் தொடர்பு கொண்டனர். ஆனால் பலனளிக்காததால், குடும்பத்தினர் அவரது வீட்டிற்கு விரைந்தனர்.
அந்த நேரத்தில், அவரது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, ருமேனிய காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன், அவர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, அட்ரியானா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.அட்ரியானாவின் உடலில் பாதியை அவரது இரண்டு செல்ல நாய்கள் சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. உணவு வழங்கப்படாததால், நாய்கள் அட்ரியானாவின் உடலை சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், தடயவியல் நிபுணர்களின் பரிசோதனையில் எந்த வன்முறையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே அவரது மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், நெகோவின் இறுதிச் சடங்கு உள்ளூர் தேவாலயத்தில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மரணத்தை உறுதிப்படுத்திய அவரது குடும்பத்தினர் சமூக ஊடகங்களில் இரங்கல் செய்தியை வெளியிட்டனர்.
முன்னதாக, 2023 ஆம் ஆண்டில், அர்ஜென்டினாவில் முதுமையால் இறந்த 67 வயது பெண்ணின் உடல், அவரது செல்ல நாய்கள் அவரை சாப்பிட்ட பல வாரங்களுக்குப் பிறகு போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!