நாட்டுமாடுகள் ‘ராஜமாதா’ என அழைக்கப்படும்... மாநில அரசு திடீர் அறிவிப்பு!

 
மாடு

 மகாராஷ்டிரா மாநிலத்தில் நாட்டு பசுமாடுகள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி  நாட்டு பசுமாடுகளை “ராஜமாதா”வாக அறிவித்துள்ளது. இதன் மூலம்  விவசாயிகள் நாட்டு மாடுகளை வளர்க்க ஊக்குவிக்கும் ஒரு முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

மாடு

பசுக்கள் இந்திய பாரம்பரியத்தின் முக்கிய அங்கமாகவும், ஆன்மிகம், அறிவியல் மற்றும் சமூகத்தில் ஆழ்ந்த தொடர்புடையவையாக இருந்து வருகின்றன.  மாட்டு சாணத்தை விவசாயத்தில் பயன்படுத்துவதன் மூலம் உணவில் ஊட்டச்சத்து அதிகரிக்கலாம் என அம்மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் பசுக்கள் மத மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா அரசு, நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பதாக விளக்கம் அளித்துள்ளது.

ஜல்லிக்கட்டு காளை  மாடு

இதன் மூலம், பசுக்களைப் பாதுகாக்கவும், விவசாயத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவியாக இருக்கும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது.  
பசுக்களை புனிதமாகக் கருதும் வட இந்திய மாநிலங்களில் பசுக்களின் மதத்தன்மை பெரும் பேசுபொருளாக இருந்து வருகிறது. இம்மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில்  இந்த அறிவிப்பு தேர்தலை முன்னோக்கிய அரசியல் நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது.

From around the web