மனைவியுடன் மேடையில் நடனமாடிய அதிபர் டொனால்ட் டிரம்ப்.. வீடியோ வைரல்!

 
டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றார். அவரது பதவியேற்பு விழா நேற்று வாஷிங்டன், டிசியில் உள்ள அரங்கிற்குள் நடைபெற்றது. முன்னாள் அதிபர்கள் ஜோ பைடன் மற்றும் பராக் ஒபாமா, எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள், பன்னாட்டு தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் சுந்தர் பிச்சை ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.


இந்தியாவின் சார்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முன் வரிசையில் இருந்து விழாவில் கலந்து கொண்டார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு டொனால்ட் டிரம்ப் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். இப்போது பதவியேற்க வந்தபோது அதே மகிழ்ச்சி அவரது முகத்தில் தெரிந்தது. விழாவிற்கு அவர் மிகவும் மகிழ்ச்சியாக வந்ததால், மேடையில் மகிழ்ச்சியுடன் நடனமாடி கேக் வெட்டினார்.


கையில் ராணுவ வாளுடன் கேக் வெட்டி நடனமாடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. மேலும், பதவியேற்ற உற்சாகத்தில், அவர் தனது மனைவி மெலனியா டிரம்புடன் கைகோர்த்து நடனமாடினார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பதவியேற்றது குறித்து பேசிய டொனால்ட் டிரம்ப், "இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாகும். நான் அதிபராக பதவியேற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web