“டெஸ்லா காரை வாங்காதீங்க...” பிரிட்டிஷ் அரசியல் பிரசாரக் குழு

 
டெஸ்லா

எலான் மஸ்க்கின் டெஸ்லா கார்களை யாரும் வாங்காதீங்க என  பிரிட்டிஷ் அரசியல் பிரசாரக் குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர். ஜெர்மனி, பிரிட்டன், இத்தாலி, நெதர்லாந்து, ஆஸ்திரியா முதலான பல நாடுகளில் புலம்பெயர்ந்தவர்களை எதிர்க்கும் தீவிர வலதுசாரியினருக்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கிழக்கு ஜெர்மனியின் ஹாலேவில் நடைபெற்ற தீவிர வலதுசாரி கட்சியான ஜெர்மனி மாற்று கட்சியின் பரப்புரையிலும் காணொலி மூலம் எலான் மஸ்க் உரையாற்றினார்.  

 


இதற்கு முன்னதாக, எலான் மஸ்க்கின் செயலைக் குறிப்பிட்டு, ஜெர்மனியில் கருத்து சுதந்திரம் இருந்தாலும், தீவிர வலதுசாரியை ஆதரிப்பதை ஏற்க முடியாது என ஜெர்மன் அதிபர் ஓலப் ஸ்கோலஸ் கூறியிருந்தார். இந்நிலையில், தீவிர வலதுசாரியை ஆதரிக்கும் எலான் மஸ்க்கை எதிர்க்கும் வகையில் அவரது நிறுவனத் தயாரிப்பு கார்களை வாங்க வேண்டாமென பிரிட்டிஷ் அரசியல் பிரச்சாரக் குழுவினர் வலியுறுத்தினர்.

டெஸ்டா  மஸ்க்
அத்துடன்  ஜெர்மனி தலைநகர் பெர்லின் அருகேயுள்ள டெஸ்லா கார் தொழிற்சாலையின் சுற்றுச் சுவரில் ``எலான் மஸ்க்கால் ஐரோப்பிய ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவரது டெஸ்லா நிறுவனக் கார்களை யாரும் வாங்க வேண்டாம். டெஸ்லா காரை நீங்கள் வாங்கினால், வலதுசாரியினருக்கு நீங்கள் ஆதரவளிக்கிறீர்கள் என்பது  பொருளாகிவிடும்'' என்ற வாசகத்துடன் குறும்படத்தையும் திரையிட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web