வெள்ளிக்கிழமைகளில் இதை எல்லாம் செய்யவே செய்யாதீங்க... அதிர்ஷ்டம் விலகும்!

 
பூஜை பூஜை

வெள்ளிக்கிழமைகளில் மறந்தும் இந்த விஷயங்களை எல்லா பண்ணாதீங்க. உங்களுடைய அதிர்ஷ்டம் உங்களை விட்டு விலகத் தொடங்கி விடும். அதனால தெரிஞ்சோ தெரியாமலோ இதுநாள் வரையில் இதில் ஏதாவது விஷயத்தை வெள்ளிக்கிழமைகளில் நீங்கள் செய்து வந்தால், இப்போதில் இருந்து அதையெல்லாம் தவிர்த்திடுங்க. மகாலட்சுமிக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. நம்மிடம் செல்வம் வருவதற்கும், நிரந்தரமாக தங்குவதற்கும் வெள்ளிக்கிழமைகளில் சில அடிப்படையான விஷயங்களைக் கடைப்பிடித்து வர வேண்டும்.

பொதுவாகவே வெள்ளிக்கிழமைகளில் நம்மிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு கடனாக கொடுப்பது போன்ற செயல்களால், லட்சுமி நம்மை விட்டு நிரந்தரமாகவே சென்று விடுவாள் என்பது ஐதீகம். அதே போல நாம் வசிக்கும் வீடு எந்த அளவிற்கு தூய்மையாகவும், மங்களகரமாகவும் இருக்கிறதோ, அந்த அளவிற்கு திருமகளின் அருளும் அந்த இல்லத்தில் நிறைந்திருக்கும். 

அரச இலை விளக்கு

வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது, அரிசி வறுப்பது, புடைப்பது கூடாது. குறிப்பாக பச்சரிசியை அஜாக்கிரதையாக கையாளாதீர்கள். அப்புறம் பால், தயிர், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்குதல், கடன் கொடுத்தல் இரண்டுமே கூடவே கூடாது.

வெள்ளிக்கிழமைகளில் பால் பொங்கி கீழே வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே போன்று, விளக்கு வைத்த பிறகு தலைவாருதல், பேன் பார்த்தல், முகம் கழுவுதல் போன்ற செயல்களைச் செய்யக் கூடாது. விளக்கு வைத்த பிறகு குப்பை, கூளங்களை வெளியே வீசக் கூடாது. காலை அல்லது மாலை நேரங்களில் வீட்டில் உள்ள மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது,விளக்கேற்றக் கூடாது.

பணம்  ரூபாய் ரொக்கம் உதவித்தொகை

வெள்ளிக்கிழமைகளில் நகம், முடி போன்றவற்றை வெட்டக் கூடாது. பூஜையின் போது, விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. இதை எல்லா நாளிலுமே கடைப்பிடிக்கலாம். குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் இதை செய்யவே செய்யாதீங்க. துண்டைக் கட்டிக் கொண்டோ, துண்டை தோளில் போட்டுக் கொண்டோ, ஈர ஆடைகளுடன் சாமி கும்பிடக் கூடாது.
தேங்காயை, பூஜைக்கு படைக்கும் போது, உடைக்கும் சமயத்தில் எதிர்பாரா விதமாக இரண்டுக்கும் மேற்பட்ட துண்டுகளாக உடைத்தால், அவற்றை எக்காரணம் கொண்டும் சாமிக்கு படைக்கக் கூடாது. இயற்கை பூக்களுக்கு பதிலாக, பிளாஸ்டிக் பூக்களையும், மா மற்றும் தென்னை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் தோரணங்களையும் கட்டுதல் கூடாது.

இவையெல்லாமே பெரிய பரிகாரங்களோ, பணத்தை அதிக செலவு செய்து கடைப்பிடிக்க வேண்டிய நியதிகளோ இல்லை. நம் அன்றாட வாழ்க்கை முறையில், நம்மால் எளிதில் கடைப்பிடிக்க கூடியவை தான்.