உஷார்... உணவு டெலிவரி செய்து விட்டு, விலையுயர்ந்த ஷுவைத் திருடும் ஸ்விக்கி ஊழியர்... வீடியோ!

 
 ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்

தலைநகர் டெல்லிக்கு அருகில் உள்ள குருகிராமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் டெலிவரி செய்பவர் ஒரு ஜோடி ஷூக்களை திருடும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. வீடியோவில், டெலிவரி செய்பவர் அடுக்குமாடி கட்டிடத்தின் படிக்கட்டுகளில் ஏறுகிறார். பின்னர், அவர் கொண்டு வந்த பார்சலை குறிப்பிட்ட வீட்டிற்கு வழங்குகிறார். அங்கு யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு மாடிப்படியில் இறங்கிய நபர், டவலால் முகத்தை துடைத்துக்கொண்டு அதே டவலால் வீட்டிற்கு வெளியே கிடந்த ஒரு ஜோடி காலணியை திருடுவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.


இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரோஹித் அரோரா,  “ஸ்விக்கியின் டிராப் மற்றும் பிக்கப் சேவையைச் சேர்ந்த ஒரு டெலிவரி பாய் எனது நண்பரின் காலணிகளை (நைக்) எடுத்தார். ஆனால் ஸ்விக்கி தனது விவரங்களைப் பகிர்ந்து கொள்ள மறுக்கிறார். என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் இந்த வீடியோவை வெளியிட்டதில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் பார்த்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அவரது இடுகை வைரலான பிறகு, ஸ்விக்கி கேர்ஸ் அவர்களுக்கு உதவ ஒரு தனிப்பட்ட செய்தியை அனுப்பச் சொன்னது. ஆனால் அதற்கும் ஸ்விக்கி எந்த பதிலும் அனுப்பவில்லை. இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்தும் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் ரோஹித்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்