மறந்துடாதீங்க... நாளை முதல் டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பப்பதிவு ஆரம்பம்!

 
டான்செட் டான்செட்

நாளை மார்ச் 16ம் தேதி முதல் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் டான்செட் மற்றும் சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்குகிறது.

2026–27 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்காக இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தகுதியான பட்டதாரிகள் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

டான்செட்

TANCET தேர்வு மூலம் எம்பிஏ, எம்சிஏ போன்ற மேல்படிப்புகளுக்கு அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் சேர்க்கை வழங்கப்படுகிறது. அதேபோல் CEETA-PG தேர்வு மூலம் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். போன்ற பொறியியல் மேல்படிப்புகளில் சேர முடியும்.

டான்செட்

அதன்படி டான்செட் தேர்வு மே 9 ஆம் தேதி நடைபெறும். சீட்டா தேர்வு மே 10 ம் தேதி நடத்தப்படும். தேர்வு முடிவுகள் மே மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.