மறந்துடாதீங்க... தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் ரயில் டிக்கெட் இன்று முன்பதிவு தொடக்கம்!
வரும் நவம்பர் மாதம் கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பண்டிகைக்குப் பிறகு சென்னை திரும்புவதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்குகிறது.
தீபாவளி தேதி: இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வரவுள்ளது. தீபாவளியைக் கொண்டாடிவிட்டுச் சொந்த ஊர்களில் இருந்து மீண்டும் நவம்பர் 9-ம் தேதி திங்கள்கிழமை ஊரிலிருந்து சென்னைக்குத் திரும்புவதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று செப்டம்பர் 10ம் தேதி ஆரம்பமாகிறது.

நவம்பர் 10-ம் தேதி செவ்வாய்க்கிழமை பயணத்திற்கான முன்பதிவு செப்டம்பர் 11-ம் தேகியும், நவம்பர் 11-ம் தேதி திரும்புவதற்கான முன்பதிவு செப்டம்பர் 12-ஆம் தேகியும் காலை 8 மணிக்குத் தொடங்கும்.
ஏற்கெனவே சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் விரைவு ரயில்களுக்கான முன்பதிவுகள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, ஊரிலிருந்து சென்னை திரும்புவதற்கான முன்பதிவுக்கும் கடுமையான போட்டி இருக்கும் என்பதால், பயணிகள் உரிய நேரத்தில் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யத் தயாராகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் வார இறுதி விடுமுறையுடன் இணைந்துள்ளதால், பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டுப் பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
