"திருமண வரம் தரும் பங்குனி உத்திர வழிபாடு" - மறக்காம இப்படி வேண்டிக்கோங்க - நிச்சய பலன்!

 
முருகன் முருகர் சஷ்டி முருகன் முருகர் சஷ்டி

தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்ற புனித நாளாக இந்த பங்குனி உத்திர நாள் விசேஷமாக கருதப்படுகிறது. பங்குனி உத்திர தினம் முருகன், சிவன், விஷ்ணு ஆகிய மூவருக்கும் உரிய நாளாகும். இன்றைய தினத்தின் அதிகாலையில் நீராடி, நாள் முழுவதும் விரதம் இருந்து மாலையில் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும். முருகப் பெருமானுக்குப் பால் குடம் எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களைச் செலுத்தலாம்.

பங்குனி உத்திரம்

இந்நாளில் தான் சிவ-பார்வதி, ராம-சீதை, முருகன்-தெய்வானை ஆகியோரின் திருமணங்கள் நடைபெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. எனவே அருகிலுள்ள கோயில்களில் நடைபெறும் திருமண வைபவத்தைத் (திருக்கல்யாணம்) காண்பது பெரும் புண்ணியம் தரும். "ஓம் சரவணபவ" அல்லது "ஓம் நமசிவாய" மந்திரங்களை 108 முறை ஜெபிப்பது சிறந்தது.

நீண்ட நாட்களாகத் தள்ளிப் போகும் திருமணங்கள் கைகூடும். பிரிந்திருக்கும் கணவன் - மனைவி ஒன்று சேரவும், குடும்பத்தில் அமைதி நிலவவும் இந்த விரதம் உதவும். குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த நாளில் முருகப் பெருமானை மனமுருகி வேண்டினால் நற்பலன் கிடைக்கும். செவ்வாய்க்கிழையும், பங்குனி உத்திரமும் சேர்ந்து வருவது கூடுதல் சிறப்பு. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்தப் பங்குனி உத்திர தினத்தில் முருகனை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும். 

பழனி பங்குனி

முருகனுக்கும் தெய்வானைக்கும் கல்யாணம் நடந்த இந்த நாளில், கல்யாணம் ஆகாதவங்க விரதம் இருந்தா சீக்கிரம் கெட்டி மேளம் சத்தம் கேட்கும். அதுவும் இந்தத் தடவை முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமையே பங்குனி உத்திரம் வர்றதால, ‘பவர்’ கொஞ்சம் அதிகம் தான். அண்ணாமலையார் கோயில்ல இருந்து பழனி வரைக்கும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுது. அதனால பங்குனி உத்திர விரதத்தை மறந்துடாதீங்க.