”என் தம்பியுடன் பழகாதே”.. கண்டித்த கணவனால் மைத்துனருடன் கிளம்பிய மனைவி..!!

 
மனைவி ஓட்டம்
கணவரை விட்டு  அவரது தம்பியான மைத்துனருடன் இளம்பெண் தலைமறைவாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், சிசோலா கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்பால் மகன் அசோக்குமார். இவர் அமஹேதா அதிபூர் கிராமத்தைச் சேர்ந்த லக்கிராம் மகள் பிரியாவை கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு விசு என்ற மகன் உள்ளார். இந்த நிலையில், அசோக்கின் வீட்டிற்கு அவரது தம்பியான ராகுல் அடிக்கடி வந்து போக ஆரம்பித்தார். அப்போது பிரியாவுக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அசோக்குமார் கண்டித்துள்ளார்.

ராகுல், பிரியா

இந்த நிலையில், கர்வா சௌத் நோம்பிற்காக பொருட்கள் தேவை என தனது கணவர் அசோக்குமாரிடம் பிரியா கேட்டுள்ளார். வட மாநிலங்களில் கர்வா சௌத் என்பது திருமணமான பெண்கள் கடைபிடிக்கும் பண்டிகையாகும். இந்த நாளில் காலை முதல் மாலை வரை பெண்கள் உண்ணாதிருந்து, தங்கள் கணவரின் உடல்நிலைக்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் நோன்பு மேற்கொள்வார்கள்.

இதற்கான பொருட்களை வாங்க கணவருடன் பிரியா ஷாப்பிங் சென்றார். இதன் பின் பொருட்களுடன் வீட்டிற்கு வந்து விட்டு விட்டு அசோக்குமார் வேலைக்குச் சென்று விட்டார். இதன் பின் இரவு அவர் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரது மனைவி பிரியா, மகன் விசு காணாமல் போயிருந்தனர். அத்துடன் வீட்டில் இருந்த தங்க, வெள்ளி நகை, பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு பிரியா தலைமறைவாகியது தெரிய வந்தது.

Wife ran away with brother-in-law before Karva Chauth | एसएसपी से बोला पति-  मेरी पत्नी वापस दिला दो, मेरी लंबी उम्र के लिए कौन रहेगा व्रत - Money  Bhaskar

இதுகுறித்து போலீஸில் அசோக்குமார் புகார் செய்துள்ளார். அதில், எனது வீட்டிற்கு ராகுல் அடிக்கடி வந்து போகும் போது அவருக்கும் என் மனைவி பிரியாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இதைக் கண்டித்ததுடன் ராகுலை வீட்டிற்கு வரக்கூடாது என்று கண்டித்தேன். இந்த நிலையில், அவர் என் மனைவி, மகனை நகைகளுடன் ராகுல் கடத்திச் சென்று விட்டார். அவர்களைக் கண்டுபிடித்து தரவேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web