இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க... தமிழகத்தில் வேகமாகப் பரவும் பன்றிக்காய்ச்சல்.. பொதுமக்களுக்குச் சுகாதாரத்துறை அவசர எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு வேகமாகப் பரவி வருவதாகத் தெரிவித்துள்ள சுகாதாரத்துறை, பொதுமக்கள் விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. நடப்பு ஆண்டின் ஜனவரி மாதத்தில் 19 பேருக்கு மட்டுமே பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 339 ஆக உயர்ந்துள்ளது.

திடீர் உயர் காய்ச்சல் மற்றும் குளிர் நடுக்கம், இருமல், தொண்டை வலி மற்றும் தலைவலி, உடல் வலி, தசை வலி மற்றும் மூட்டு வலி, கடுமையான சோர்வு, மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் நெஞ்சு வலி ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்:

அறிகுறிகள் தீவிரமடையும் முன் ஆரம்பக் கட்டத்திலேயே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியமாகும். நீங்களாகவே அலட்சியப்படுத்தி, சுய மருத்துவம், வீட்டு வைத்தியம் பார்க்கிறேன் என்று மருந்து மாத்திரைகளை உட்கொள்ளாமல், உடனடியாக அருகில் உள்ள மருத்துவரின் காட்டி ஆலோசனைப் பெறுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
