அமாவாசை தினத்துல மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீங்க!

 
அமாவாசை
அமாவாசை தினத்தில் நாம் சரியாக செய்யாவிட்டாலும் கூட பரவாயில்லை ஆனால் தவறாக இதை எல்லாம் செய்யாதீங்க. இன்று ஆவணி மாத அமாவாசை தினம். அமாவாசை தினத்தில் விரதம் இருந்து, படைத்து, எள் தண்ணீர் இறைப்பது நமது பித்ருக்களை திருப்திபடுத்தும். ஆனால் அமாவாசையன்று சில காரியங்களைச் செய்ய கூடாது என்பதும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. 

மாதத்தின் அனைத்து நாட்களுமே அதிகாலையில் வீட்டைச் சுத்தம் செய்து, வாசலில் கோலமிட்டு, விளக்கேற்றி வழிபடுவது சிறப்பான பலன்களை தரும். ஆனால் அமாவாசையன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது என்கின்றனர் பெரியோர்கள். அமாவாசை தினத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து காகங்களுக்கு அன்னமிட்ட பின் வாசலில் கோலமிடுவதில் தவறில்லை. அல்லது அன்றைய தினம் முழுவதுமே வாசலில் கோலம் போடாமல் இருக்கலாம்.

விநாயகருக்கு சதுர்த்தி.முருகனுக்கு சஷ்டி. பெருமாளுக்கு ஏகாதசி. பைரவருக்கு அஷ்டமி.பௌர்ணமிக்கு அம்பிகை . இதைப் போலவே, பித்ருக்களுக்கு அமாவாசை. அதனால் தான் தினமும் இல்லாவிட்டாலும், அமாவாசை திதியில் மட்டுமாவது தான தருமங்களைச் செய்ய வேண்டும்

அமாவாசை அன்று மறந்தும்  இதை மட்டும் செய்யாதீங்க!

அமாவாசையில் செய்கின்ற தர்ப்பணம் மற்றும் தானங்களால் முன்னோர்களின் தாகமும், பசியும் நிவர்த்தியாவதுடன் குலம் செழிக்கும். நம் இருப்பிடத்தைத் தேடி வரும் முன்னோர்கள் பசி, தாகம் தீர எள்ளு கலந்த நீரினால் தர்ப்பணம், சிராத்தம் செய்யும் போது, ஏற்றுக்கொண்டு நம்மை ஆசிர்வதிக்கிறார்கள்.

அமாவாசை அன்று மறந்தும்  இதை மட்டும் செய்யாதீங்க!

அமாவாசையில் வாசலில் கோலம் போடுவது, மணி அடிக்கும் ஒலி, இரும்புப் பாத்திரத்தின் ஒலி இவற்றால் பித்ருக்களின் வருகை தடைபடும். இதனால் தர்ப்பணம் முடிந்து காகத்திற்கு அன்னமிடும் வரை அதாவது வீட்டுக்கு பித்ருக்கள் வந்து செல்லும் வரை, வீட்டு வாசல் மற்றும் பூஜை அறையிலோ கோலம் போடுவதையும், மணியடித்து ஒலி எழுப்பி பூஜைகள் செய்வதையும் தவிர்க்க வேண்டும் என்கின்றனர் சாஸ்திர நிபுணர்கள். 

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web