புரட்டாசி சனிக்கிழமையில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க...!
நீண்ட நாட்களாக நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை தரிசிக்க ஆரோக்கியம் பெறலாம். ஆயுள் பலத்தை அதிகரிக்கலாம். சனிஸ்வரனின் கொடூரப் பார்வையிலிருந்து சுலபமாக தப்பித்து காக்கும் கடவுளான விஷ்ணுவின் பாதத்தில் சரணாகதி அடையலாம். புரட்டாசி சனிக்கிழமைக்களில் முழுவதும் உபவாசம் இருப்பது சிறப்பு. மேலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவில்களுக்கு சென்று வழிபட அவர் சனியின் பிடியிலிருந்து காப்பாற்றுவார்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. ஆனால் தர்மம் செய்வதற்கு தடை இல்லை. மாறாக இந்த நாளில் செய்யும் தர்மம் பல மடங்காகப் பெருகி நம் வாழ்வைக் காக்கும். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து வழிபட்டு வணங்கினால், புண்ணிய பலன் அதிகரிக்கும். புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளை கொண்டாடுவோம். அவன் அருள் மழையில் நனைவோம்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!