மிஸ் பண்ணாதீங்க... இன்றே கடைசி தேதி... ஆவினில் மாதம் ரூ.43,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

 
ஆவின்

ஆவின் நிறுவனத்தில் மாதம் ரூ.43,000 சம்பளத்தில் வேலை வாய்ப்புக்கான நேர்காணல் இன்று பிப்ரவரி 13ம் தேதி நடைபெறுகிறது.
தமிழ்நாடு ஆவின் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் ஆனது நடமாடும் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆவின் நிறுவனம் நடமாடும் கால்நடை மருத்துவ ஆலோசகர் பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.V.Sc.&AH முடித்திருக்க வேண்டும். இத்துடன் நான்கு சக்கர அல்லது இருசக்கர வாகனத்திற்கான ஓட்டுநர் உரிமம் வேண்டும்.

புதிய ஊதிய குறியீடு: 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை! இன்னும் என்னென்ன?
இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் அதிகபட்ச வயது 50-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிக்கை அணுகவும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.43,000 சம்பளம் வழங்கப்பட உள்ளது.
திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இன்று பிப்ரவரி 13 நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web