மிஸ் பண்ணாதீங்க... 6,574 பணியிடங்கள்... டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6,574 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு விண்ணப்பப் பதிவு நாளை வியாழக்கிழமை நள்ளிரவு 11:59 மணியுடன் நிறைவடைகிறது.

6,574 காலி பணியிடங்களுக்கு இதுவரை சுமார் 9.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நாளை நவம்பர் 5, 2026 (வியாழக்கிழமை) நள்ளிரவு 11:59 மணி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத் திருத்தக் காலம் நவம்பர் 9 முதல் நவம்பர் 11, 2026 வரை அனுமதிக்கப்படுகிறது. தேர்வு ஜனவரி 10, 2027ல் காலை 9:30 மணி முதல் நண்பகல் 12:30 மணி வரை நடைபெறும்.

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in வாயிலாகத் தங்களின் ஒருமுறைப் பதிவை மேற்கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கடைசி நேரத்தில் இணையதளச் சர்வர் நெரிசலைத் தவிர்க்க விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
