செல்போனை பக்கத்துல வச்சிட்டு படுக்காதீங்க!! ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை!!

 
செல்போனுடன் தூக்கம்

மனிதர்களின் கையில் ஆறாம் விரலாய் தூங்கி எழுந்த உடன் மொபைலின் முகத்தில் தான் விடியலே. அதில் தொடங்கி இரவு தூக்கம் சொக்கிவிழும் வரை மொபைலில் தான் வாழ்க்கையே நடத்துகிறோம். இதில் இரவு தூங்க செல்லும் முன் சார்ஜ் போட்டுவிட்டு தூங்க செல்வது. அதை காலையில் தான் ஆப் செய்வது என்ற வழக்கத்தில் இருக்கிறோம். இது தவறு என பல எச்சரிக்கை, விழிப்புணர்வு வாசகங்கள் தெரிவிக்கப்பட்ட போதிலும் அதையெல்லாம் கண்டுகொள்வதே இல்லை. தற்போது ‘சார்ஜ் போடப்பட்ட செல்போனை பக்கத்தில் வைத்துக் கொண்டு தூங்காதீர்கள்’ என அதன் பாதக அம்சங்களை  பிரபல ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

செல்போனுடன் தூக்கம்
காலையில் எழும் போது, மொபைலில் சார்ஜ் 100% பேட்டரியுடன் இருக்க வேண்டும். அப்போது தான் அந்த நாள் நன்னாளாக அமையும்.  தூக்கம் வரும் வரை செல்போனை பார்த்துவிட்டு  எடுக்க வசதி என படுக்கையிலோ அல்லது படுக்கைக்கு அருகிலேயோ  வைத்து விட்டு தூங்க செல்கிறோம்.  அவ்வாறு படுக்கை மற்றும் படுக்கைக்கு அருகில் செல்போனை சார்ஜில் போடும் போது, எளிதில் தீ விபத்து  ஏற்படலாம். அத்துடன்  உடற்காயங்கள், மின்சார தாக்குதல்கள் உட்பட  பல்வேறு அபாயங்கள் ஏற்படலாம் என  ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இது தவிர்த்து படுக்கையில் சார்ஜில் போடப்பட்ட செல்போன் மீது நாம் புரண்டு தூங்கும் போதோ, தலையணை மற்றும் விரிப்பின் கீழாக செல்போனை சார்ஜில் வைப்பதாலோ,   பாதிப்புகள் அதிகம் . 

செல்போனுடன் தூக்கம்


செல்போனை சார்ஜில் போடும் போது அதனை ஜன்னலுக்கு அருகில் என காற்றோட்டமான இடத்தில் வைத்தே அவற்றை செயல்படுத்த வேண்டும் என ஆப்பிள் அறிவுறுத்தியுள்ளது.  மேலும், சார்ஜிங் அடாப்டர்கள் மற்றும் கேபிள் உட்பட சகலத்தையும் அதிகாரபூர்வ நிறுவனத்திடம் இருந்து வாங்குவதே சிறந்தது. போலிகளை தவிர்த்து விட வேண்டும்.   இந்த அறிவிப்புக்கள், எச்சரிக்கைகள், பயன்பாடுகள் அனைத்தும் ஐபோன் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமல்ல அனைத்து வகையான மொபைல் போன் உபயோகிப்பாளர்களுக்கும் தான்.  அத்துடன் மொபைல் திரையில் இருந்து   வெளிப்படும் நீலக்கதிர்கள், உடலின் தூக்கத்துக்கு காரணமான மெலட்டோனின் ஹார்மோன் சுரப்பை தடுத்து நிறுத்தி விடும் . இதனால் உடல் ஆரோக்கியத்துக்கு ஊறுவிளைவிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.  
 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web