வேங்கை வயல் குறித்து தவறான செய்திகளை பரப்பாதீங்க... தமிழக அரசு வேண்டுகோள்!

வேங்கைவயல் சம்பவத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. வேங்கைவயல் சம்பவத்தில் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே 3 பேர் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கும் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முரளிராஜா, சுதர்ஷன், முத்தையா, முத்துகிருஷ்ணன் இவர்களின் செல்ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் பகுப்பாய்வு செய்யப்பட்டது.
செல்ஃபோன்களில் இருந்து அழிக்கப்பட்ட உரையாடல்கள், புகைப்படங்கள் மீட்கப்பட்டு இச்சம்பவத்தில் அவர்களது தொடர்பு உறுதி செய்யப்பட்டது.
புகைப்படங்கள், செல்ஃபோன் உரையாடல்கள், வீடியோ ஆதாரங்கள், தடயவியல், மருத்துவ அறிக்கைகள் கொண்டே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேங்கைவயல் விவகாரம் குறித்த தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!