"அரசியல் பேசாதீங்க" ராமதாஸ் வீட்டின் முன்பு பரபரப்பைக் கிளப்பிய பேனர்!

 
ராமதாஸ்

திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸின் வீட்டின் முன்பு வைக்கப்பட்டுள்ள புதிய பேனர் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

அரசியலில் இருந்து தான் விலகுவதாக ஏற்கனவே ராமதாஸ் அறிவித்துள்ள நிலையில், தன்னைச் சந்திக்க வரும் பார்வையாளர்கள் யாரும் அரசியல் தொடர்பாகப் பேச வேண்டாம் எனத் தெளிவாகக் கோரிக்கை விடுத்துள்ளார். அதனைக் குறிக்கும் வகையிலேயே தைலாபுரம் வீட்டின் முன்பு "அரசியல் பேச வேண்டாம்" எனக் குறிப்பிடப்பட்ட பேனர் வைக்கப்பட்டுள்ளது.

அரசியலில் இருந்து விலகியிருந்தாலும், தினமும் காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை கட்சி நிர்வாகிகளையும் பொதுமக்களையும் ராமதாஸ் வழக்கம் போலச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.