இன்று முதல் வீடு வீடாக டோக்கன்... பெஞ்சால் புயல் நிவாரண நிதி!
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது இதனையடுத்து விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி கடலூர் மாவட்டங்கள் மிகக்கடுமையான பாதிப்புக்களை பெற்றன.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ2000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.

அதன்படி இந்த நிவாரணத் தொகை ரூ.2,000 ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று வருவாய்த் துறை செயலர் அமுதா தெரிவித்துள்ளார். மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூ.2,000 நிவாரணம் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் எனவும், மற்ற இடங்களில் இன்று முதல் டோக்கன் வழங்கப்பட்டு படிப்படியாக ஓரிரு நாட்களில் முழுமையாக நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
