தோசை பிரியர்களே! இதோ புதுவகை நெருப்பு தோசை!

 
தோசை பிரியர்களே! இதோ புதுவகை நெருப்பு தோசை!


உணவு பிரியர்களின் பட்டியலில் பெரும்பாலும் தோசைகள் இடம் பெற்றிருக்கும். அந்த வகையில் விதவிதமான தோசைகள் பல உண்டு. அதிலும் சைவம், அசைவம் என தோசைகளின் வகைகள் மிகவும் ஏராளம். ஆனால் தற்போது புது வகையான நெருப்பு தோசை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


அடுப்பு எரிய மேலே மாவு ஊற்றி தோசை சுடுவது வழக்கம். ஆனால் இந்த நெருப்பு தோசை அப்படி அல்ல. அதன் மேலே தீ வைத்து எரிக்கப்படுகிறது.
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த சமையல் கலைஞர் ஒருவ ர் தோசைக் கல்லில் மாவை ஊற்றி தேய்த்து, அதன் மேல் வட இந்திய ஸ்டைலில் மசாலாவை கலக்குகிறார்.

தோசை பிரியர்களே! இதோ புதுவகை நெருப்பு தோசை!


பின்னர் அடுப்புக்கு கீழே காற்றாடியை பிடித்ததும், அனல் பறக்கிறது. தோசையை நெருப்பு சூழ்கிறது. கடைசியாக கொத்தமல்லி, பாலாடைக் கட்டி தூவி மடித்து எடுக்கிறார்.


அனல் பறக்கும் தோசை மீது மேலும் கிரீம், பாலாடைக் கட்டி தூவி பீட்சா போல பரிமாறுகிறார். இந்த நெருப்பு தோசையை மக்கள் விரும்பி சுவைத்து சாப்பிட்டு இன்னும் இன்னும் என கேட்டு வாங்குகின்றனர். இந்த நெருப்பு தோசை வீடியோ தற்போதுசமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது

From around the web