இரட்டைக் கொலை வழக்கில் அதிரடி நடவடிக்கை! சிசிடிவி காட்சிகள் மூலம் 5 பேர் கைது
Sep 17, 2026, 10:52 IST
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின்பேரில், கொலை வழக்கைத் துப்புதுலக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து தனிப்படை போலீஸார் சம்பவம் நடைபெற்ற பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதன் அடிப்படையில், கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும் பாலமுருகன் (24), தனராஜ் (19), சந்தோஷ் (19), சதீஷ்குமார் (25) மற்றும் காளீஸ்வரன் (23) ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் கொலைக்கான பின்னணி, சம்பவத்தில் அவர்களின் பங்கு உள்ளிட்டவை குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
