சிவகங்கையை அதிர வைத்த இரட்டைக்கொலை... ஓட ஓட விரட்டி இரண்டு பேர் வெட்டிக் படுகொலை... முகம் சிதைக்கப்பட்ட நிலையில் உடல்கள் மீட்பு!

 
கொலை படுகொலை வெட்டிக்கொலை

சிவகங்கை அருகே உள்ள பழமலை நகர் பகுதியில் இரண்டு ஆண்கள் மர்மமான முறையில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்டுக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை நகருக்கு அருகிலுள்ள பழமலை நகர் பகுதியில் இரண்டு ஆண்கள் படுகொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனடியாக அங்கு விரைந்த காவல்துறையினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரின் உடல்களையும் மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து

கொல்லப்பட்டவர்களின் முகங்கள் அடையாளம் தெரியாத அளவுக்குக் கடுமையாகச் சிதைக்கப்பட்ட நிலையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகக் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் ஒருவர் சிவகங்கை அருகிலுள்ள குறுந்தனி பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரன் என்பது காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது. மற்றொரு நபர் யார் என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும், இந்தத் கொடூரச் செயலில் ஈடுபட்ட கொலையாளிகள் எங்குள்ளனர் என்பது குறித்தும் சிவகங்கை மாவட்டக் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிரத் தேடுதல் வேட்டையிலும் விசாரணையிலும் ஈடுபட்டுள்ளனர்.