நடத்தையில் சந்தேகம் .. மனைவியை கொடூரமாக வெட்டி கொன்ற கணவன் ..!!

 
விளாத்திகுளத்தில் மனைவி கொலை
சந்தேகத்தின் பேரில் மனைவியை கொடூரமாக கொன்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், குமரன் நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன் (45). இவர் விளாத்திகுளத்தில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அம்பிகாபதி (40). இவர் விளாத்திகுளம் அருகே உள்ள ராமச்சந்திராபுரத்தில் ரேஷன் கடை ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு சிவ பெருமாள் (13) என்ற மகனும், மகாலட்சுமி (11) மகளும் உள்ளனர்.

Vilathikulam, Thoothukkudi : விளாத்திகுளம்: விளாத்திகுளம் பாரதி தெருவில்  வெறி நாய்கள் கடித்ததில் ஆறு ஆடுகள் பலி - விளாத்திகுளம் பேரூராட்சியின் தொடர்  ...

இந்நிலையில் அம்பிகாபதிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு நபருக்கும் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது லட்சுமணனுக்கு தெரிய வரவே கணவன் மனைவி இருவருக்கும் இடையே சந்தேகத்தின் பேரில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்று நண்பகலில் தம்பதியர் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த கணவர் லட்சுமணன், மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவி அம்பிகாபதியை வீட்டு வாசலின் அருகே விரட்டி சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.

Vilathikulam, Thoothukkudi : விளாத்திகுளம்: ஆதரவற்ற உடலுக்கு நல்லடக்கம்  செய்து அனைத்து தரப்பு மக்களின் பாராட்டுகளைப் பெற்ற விளாத்திகுளம் காவல் ...

இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வெட்டிக் கொலை செய்யப்பட்ட அம்பிகாபதியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விளாத்திகுளம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து தலைமறைவான லட்சுமணனை தேடி வருகின்றனர்.

From around the web