வரதட்சணையால் விபரீதம்... மனைவியை அடித்தே கொன்ற கணவன்!

 
மீனா
 

உத்தரப்பிரதேச  மாநிலத்தில் வரதட்சணை தராததால் இளம்பெண்ணை, அவரது கணவன் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேச மாநிலம் பைகேடா கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர். கடந்த 2 ஆண்டுகள் முன்பு இவருக்கு மீனா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது வரதட்சணையாக ரூ.3 லட்சம் பணம், அப்பாச்சி மோட்டார் பைக் ஆகியவை தர வேண்டும் என்று மணமகன் வீட்டார் கேட்டுள்ளனர். ஆனால் மீனாவின் குடும்பத்தினரால் இந்த வரதட்சணையை கொடுக்க முடியவில்லை. 

ஆம்புலன்ஸ்

வரதட்சணை தொடர்பாக திருமணம் ஆன நாளில் இருந்தே கணவன் தொடர்ந்து சண்டையிட்டு வந்ததால், மீனா தனது கணவரைப் பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் மாமனார் வீட்டிற்கு அடிக்கடி வந்த சுந்தர் மனைவியை சமாதானப்படுத்த முயன்றுள்ளார். இறுதியாக மீனா சமாதானம் ஆனதால் நேற்றிரவு தனது வீட்டிற்கு மனைவியை அவர் அழைத்து சென்றுள்ளார். 

உத்தரபிரதேச போலீஸ்

இந்நிலையில், மீண்டும் வரதட்சணை தொடர்பாக மனைவியிடம் சுந்தர் சண்டையிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில், மனைவியின் தலையை கட்டையால் தாக்கி கழுத்தை நெரித்து சுந்தர் கொலை செய்துள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி உள்ளார். இதனையடுத்து, குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சுந்தரை தீவிரமாக தேடி வருகின்றனர்.