இந்தியாவின் முதல் திருநங்கை முதுநிலை மருத்துவர் - வரலாற்றுச் சாதனை படைத்த டாக்டர் ரூத் ஜான் பால்!

 
இந்தியாவின் முதல் திருநங்கை முதுநிலை மருத்துவர்  டாக்டர் ரூத் ஜான் பால்

மருத்துவத் துறையில் பல்வேறு சமூகத் தடைகளையும், குடும்ப எதிர்ப்புகளையும் தாண்டி தெலங்கானாவைச் சேர்ந்த டாக்டர் கொய்யாலா ரூத் ஜான் பால் அவர்கள் இந்தியாவின் முதல் திருநங்கை முதுநிலை மருத்துவர் என்ற பெருமையைத் தன்வசப்படுத்தியுள்ளார்.

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த ரூத் ஜான் பால், எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பை மேற்கொண்டிருந்த காலகட்டத்தில் தனது திருநங்கை அடையாளத்தை வெளிப்படுத்தினார். இதனால் குடும்பத்தினரின் கடுமையான எதிர்ப்பையும், சமூகத்தில் பல்வேறு பாகுபாடுகளையும் எதிர்கொள்ள நேரிட்டது.

பெண் மருத்துவர்

அனைத்துச் சவால்களையும் மன உறுதியுடன் எதிர்கொண்ட அவர், தனது மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து அவசர மருத்துவப் பிரிவில் முதுநிலைப் படிப்பில் இணைந்து தற்போது அதில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதன் மூலம், இந்தியாவின் முதல் திருநங்கை முதுநிலை மருத்துவர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்து பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.