புவி அறிவியல் அமைச்சகத்தின் புதிய செயலாளராக டாக்டர் ஸ்ரீனிவாச குமார் தும்மாலா பொறுப்பேற்பு!
இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் புதிய செயலாளராகப் புகழ்பெற்ற கடல்சார் ஆய்வாளரும் விஞ்ஞானியுமான டாக்டர் ஸ்ரீனிவாச குமார் தும்மாலா அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.
இவருக்கு முன்பு இந்தப் பதவியில் டாக்டர் எம். ரவிச்சந்திரன் பணியாற்றி வந்தார். அதனைத் தொடர்ந்து, அண்மைக் காலத்தில் டாக்டர் என். கலைச்செல்வி கூடுதல் பொறுப்பாக இந்த அமைச்சகத்தின் பணிகளைக் கவனித்து வந்தார்.
அறிவியல் மற்றும் கடல்சார் ஆய்வுகளில் நீண்ட அனுபவம் கொண்ட டாக்டர் ஸ்ரீனிவாச குமார் தும்மாலா, தற்போதைய காலகட்டத்தில் புவி அறிவியல் துறையின் பல முக்கிய ஆராய்ச்சி மற்றும் மேலாண்மைப் பணிகளை முன்னெடுத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
'பல்வகை ஆபத்து முன்னெச்சரிக்கை’ அமைப்பை இந்தியா விரிவுபடுத்தி வரும் முக்கியமான ஒரு காலகட்டத்தில் இவர் இந்தப் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
