சொந்த வீடு கனவு... பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம்!

 
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா PMAY திட்டம் சொந்த வீடு

மத்திய அரசின் 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' (PMAY) திட்டத்தின் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவை நனவாக்கும் வகையில் மானிய விலையில் வீடுகள் மற்றும் வட்டி மானிய உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்குத் தகுதியான பயனாளிகள் எளிய முறையில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வீடு நிதியுதவி பிஎம்

பயனாளிகள் திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான pmaymis.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் உள்ள 'Citizen Assessment' என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

வீடு விற்பனை

விவரங்களை உள்ளீடு செய்தப் பின்னர் அங்கு கேட்கப்படும் உரிய விவரங்களைச் சரியாக உள்ளீடு செய்ய வேண்டும். இணையம் மூலமாக விண்ணப்பிக்க இயலாதவர்கள், தங்களுக்கு அருகிலுள்ள பொது சேவை மையங்கள் மூலமாகவும் இத்திட்டத்திற்கு எளிய முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.