தமிழகத்தில் நாளை முதல் Driving Licence, RC டிஜிட்டல் மயம்... வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

 
ட்ரைவிங் லைசன்ஸ்

தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் (Driving Licence) மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC) வழங்கும் முறையில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இனிமேல் அட்டை வடிவிலான (Physical) அட்டைகளுக்குப் பதிலாக முழுமையாக டிஜிட்டல் முறையில் சான்றிதழ்கள் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tamil Nadu Driving Licence to Go Digital from September 13 New Facility Announced by State Government

  • இலவசப் பதிவிறக்கம்: வரும் செப்டம்பர் 13 முதல் பொதுமக்கள் தங்கள் ஓட்டுநர் உரிமம் மற்றும் RC-யை ஒரு வருட காலத்திற்கு இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  • QR குறியீடு மற்றும் பாதுகாப்பு: பதிவிறக்கம் செய்யப்படும் டிஜிட்டல் ஆவணங்களில் QR குறியீடு இடம்பெறும். இதனை ஸ்கேன் செய்வதன் மூலம் அரசின் அசல் தரவுகளுடன் சரிபார்த்துக் கொள்ள முடியும். மேலும், இந்த ஆவணங்கள் 'm-Parivahan' மற்றும் 'DigiLocker' செயலிகளுடனும் இணைக்கப்பட்டுள்ளன.

  • அச்சுப் பிரதிக்கு அனுமதி: பரிவாகன் (Parivahan) தளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்படும் டிஜிட்டல் ஆவணங்களின் தெளிவான அச்சுப் பிரதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். செப்டம்பர் 12-க்குப் பிறகு ஓட்டுநர் உரிமம் மற்றும் RC-யை கட்டாயமாக அச்சு வடிவிலேயே சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகள் யாரும் கோரக் கூடாது என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • இ-சேவை மையங்கள்: விருப்பப்படுவோர் செப்டம்பர் 15 முதல் அரசு அங்கீகரிக்கப்பட்ட இ-சேவை மையங்கள் மூலம் கட்டணம் செலுத்தி அச்சுப் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.