குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மீது டிரோன் தாக்குதல்; சவுதி அரேபியா கண்டனம்!

 
ஈரான் போர் துபாய் ஈரான் போர் துபாய்

குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் நிலப்பரப்பு, வான்வெளி மற்றும் கடல்சார் பகுதிகளில் திடீரென டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல் வளைகுடா நாடுகளின் அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் செயல் எனச் சவுதி அரேபியா தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையைப் பாதுகாக்க எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் சவுதி அரசு துணை நிற்கும் என அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஈரான் அணு

குவைத் நாட்டின் வான்வெளி மீது நேற்று காலை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்குக் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகமும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன. இது குவைத் நாட்டின் இறையாண்மையை மீறும் செயல் என்றும், சர்வதேசச் சட்டங்களுக்கு எதிரானது என்றும் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத் தாக்குதல்கள் மூலம் பிராந்தியத்தில் பதற்றத்தை உருவாக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அபுதாபி போர்

இந்தத் தாக்குதல்களை ஈரானே நடத்தியிருக்கக் கூடும் எனப் பாதிக்கப்பட்ட நாடுகள் சந்தேகம் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆப் இஸ்ரேல் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் நாட்டு எல்லைகளில் பல்வேறு ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில், வளைகுடா நாடுகளில் மீண்டும் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.