போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் ஜெய்ப்பூரில் அதிரடி கைது!

 
ஜாபர் சாதிக்

ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாக இருந்து வந்த ஜாபர் சாதிக்  இன்று காலை ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தி.மு.க. அயலக அணி பொறுப்பில் இருந்து வந்த ஜாபர் சாதிக், கடந்த சில ஆண்டுகளாகவே போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில், ரூ.2,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள போதைப்பொருட்களை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியானது.

இதைத்தொடர்ந்து சென்னை மயிலாப்பூர் சாந்தோமில் உள்ள அவரது வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். வீட்டை பூட்டி விட்டு ஜாபர் சாதிக் தலைமறைவான நிலையில் பூட்டை உடைத்து அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள் ஏராளமான ஆவணங்களை கைப்பற்றி வீட்டுக்கு சீல் வைத்தனர்.

ஜாபர் சாதிக்

ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று விடக்கூடாது என்பதற்காக லுக் அவுட் நோட்டீசும் கொடுக்கப்பட்டு விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. ஜாபர் சாதிக்கின் வீட்டு முன்பு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பதுங்கி இருந்த ஜாபர் சாதிக்கை  மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் இன்று காலை கைது செய்துள்ளனர்.

From around the web