ரூ.1,745 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்... மும்பையில் பரபரப்பு!

 
மும்பை போதைப் பொருட்கள் மும்பை போதைப் பொருட்கள்

நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மராட்டிய மாநிலம் மும்பையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 349 கிலோ எடையுள்ள உயர்தர போதைப்பொருள் சிக்கியது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு சுமார் 1,745 கோடி ரூபாய் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 கிலோ போதைப் பொருட்கள்

சிறிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் குறித்து அதிகாரிகள் நடத்திய தொடர் விசாரணையில், பின்னணியில் இருந்த மிகப்பெரிய கடத்தல் கும்பல் குறித்த ரகசியம் அம்பலமானது. இதனையடுத்து மறைவிடங்களை முற்றுகையிட்ட தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமை அதிகாரிகள், இந்த மெகா அளவிலான போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர்களிடம் அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிர்ச்சி!! ரூ. 400 கோடி போதைப் பொருட்களுடன் இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகு..!!

சுமார் 1,745 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளைத் துணிச்சலாகப் பறிமுதல் செய்த அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் இத்தகைய நடவடிக்கைகள் மிக முக்கியமானவை என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார். இந்த மிகப்பெரிய கடத்தல் பின்னணியில் சர்வதேச கும்பல்களுக்குத் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.