குடிபோதையில் டாஸ்மாக்கில் அட்டகாசம்.. பொதுமக்களை பீர் பாட்டிலால் தாக்கும் ரவுடிகள்!

 
மறைமலைநகர் பார்

மறைமலைநகர் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் போதையில் ரவுடிகள் சிலர் பீர் பாட்டிலால் பொதுமக்களை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட கோகுலபுரம் பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம்  சிலர் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது குடிபோதையில் இரு ரவுடிகள் அவர்களை மிரட்டி ரகளையில் ஈடுபட்டனர்.

மேலும், ஏற்கனவே மது அருந்தி மயங்கி கிடந்த இளைஞரை தாக்கியுள்ளனர். கழுத்தில் கால் வைத்து மிதித்தார்கள். மேலும், பீர் பாட்டிலால் தலையின் பின்பகுதியில் தாக்கி கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதில் அந்த வாலிபர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அங்கு இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்நிலையில், பட்டப்பகலில் சில கும்பல் பொதுமக்களை தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'டாஸ்மாக் பார்களில் சமீபகாலமாக ரவுடிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. எனவே, டாஸ்மாக் பார்களில்அ அட்டகாசத்தில் ஈடுபடுவோர் மீது காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web